×

டிக் ஷ்னரி கொடுத்து இளைஞர்கள், இளம் பெண்களை சேர்க்கும் இலை கட்சியின் டெக்னிக் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சர்வே துறையில் சரசரவென பணத்தை குவித்த அதிகாரி பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கோவை மாவட்ட சர்வே துறையில் தலைமை சர்வேயர்கள், துணை சர்வேயர்கள், உதவி சர்வேயர்கள் இருக்காங்க. இவர்கள் பட்டா, சிட்டா மாற்றம் செய்தல், நிலத்தை பிரித்து சப்-டிவிஷன் செய்து ஆர்டர் கொடுப்பது, நேரடியாக இடத்திற்கு சென்று அளவீடு எடுப்பது போன்ற பணிகளுக்கு ₹30 ஆயிரம் முதல் ₹50 ஆயிரம் வரை வசூல் செய்கிறார்களாம். இவர்களை கண்காணித்து, நடவடிக்கை எடுக்கவேண்டிய உயரதிகாரி இன்னும் ஒரு சில மாதங்களில் ஓய்வுபெற உள்ளாராம். அதனால், கிடைத்தவரை லாபம் என, அவரும் களத்தில் இறங்கி விளையாட துவங்கி விட்டார். கீழ்நிலை அதிகாரிகள் மீது புகார் வந்தால், இடமாற்றம் செய்யாமல் இருக்க, மாதம்தோறும் கப்பம் கட்டு… என நெருக்கடி கொடுத்து, அதையும் பெற்றுக்கொள்கிறார். இவருக்கு மேல்நிலையில் உள்ள துணை இயக்குனர், இணை இயக்குனர் என யாரேனும் நடவடிக்கை எடுத்துவிடுவார்கள் என்ற பயமும் இல்லையாம். முதல்ல இவருக்கு ஓய்வு கொடுத்து அனுப்புங்கப்பா… லஞ்ச தொல்லை தாங்க முடியல  என ரியல் எஸ்டேட் புரமோட்டர்கள், லைசென்ஸ் பில்டிங் சர்வேயர்கள் புலம்புகிறார்கள்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘தனித்து போட்டியிடும் முடிவுக்கு புல்லட் சாமி வந்துவிட்டாராமே, அப்டியா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘புதுச்சேரியின் புல்லட்சாமி யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வார் என தெரியாமல் பழைய கூட்டாளிகளான தாமரையும், இலையும் குழம்பி போய் இருக்கிறது. தாமரையின் மேலிடப்பொறுப்பாளர் புதுச்சேரிக்கு பலமுறை விஜயம் செய்தும் அவரை போய் புல்லட் சாமி சந்திக்கவில்லையாம். மேலும் அவர்  சரிபட்டு வரமாட்டார் என தாமரை நிர்வாகிகள் அவரிடம் சொல்லிட்டாங்களாம். இலையின் மறைந்த முதல்வரிடம் கூட்டணி வைத்துவிட்டு கடைசி கட்டத்தில் கழற்றிவிட்டார். அவரு டேஞ்சரான ஆளு என தாமரை தரப்பினர் சொன்னாங்களாம். இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது,  தாமரையை கூட்டணியில் சேர்க்க புல்லட் சாமிக்கு மனமில்லையாம். மேலும் 20 தொகுதியை குறிவைத்து வேலை செய்ய தனது கட்சிக்காரர்களுக்கு மறைமுகமாக உத்தரவு போட்டு இருக்கிறாராம். கூட்டணியெல்லாம் நான் பிறகு சொல்கிறேன். வேலையை மட்டும் பார்க்கவும் எனக்கூறிவிட்டதால், புல்லட்சாமி இந்த தேர்தலில் தனித்தே நிற்கலாம் என்ற முடிவில் இருப்பதை வெளிப்படுத்தியிருக்கிறார். வேண்டுமானால் இலையை மட்டும் வைத்துக்கொள்வோம். அவர்கள் தனியாக வராவிட்டால், அவர்களும் தேவையில்லை என்ற முடிவில் இருக்கிறார். 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் ஜாதகத்தை வாங்கி ஆஸ்தான ஜோதிடரிடம் கொடுத்து பார்க்க சொல்லியிருக்கிறார். எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டாரா புல்லட்சாமி என சொந்த கட்சிக்காரர்களே கொதிக்கிறார்களாம். போனமுறை இதேபோன்று ஜோதிடம், யாகம் என நம்பி கையில் இருந்த வெற்றியை கோட்டை விட்டதை சுட்டிக்காட்டுகிறார்கள்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘கரன்சி காட்டினால் கைது இல்லை என்ற கோட்டை மாவட்டத்தின் ‘பாலிசி’ பற்றிச் சொல்லுங்க…’’என்றார் பீட்டர் மாமா.‘‘மலைக்கோட்டை மாநகரில் உள்ள காவல் நிலையத்தில் உள்ள மலையான காவல் நிலையத்தில் குற்றவாளிகளை கைது செய்வதில் கூட கரன்சி பார்த்து கைது படலம் நடப்பதாக சக காக்கிகளே வருத்தப்படறாங்க. சமீபத்தில் மதுகலப்பட வழக்கில் ரவுடி ஒருவர் கைது செய்யப்பட்டாராம். இந்த வழக்கில் அவரது அண்ணனும் உடந்தையாக இருந்துள்ளார். அண்ணனும் ரவுடிதான். ஆனால் அவரை கைது செய்யாமல் தம்பியை மட்டும் கைது செய்தார்களாம். இதற்காக கணிசமான தொகை கைமாறியதால் அண்ணனை விட்டுவிட்டதாக சக காக்கிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இப்பகுதியில் நடக்கும் சம்பவங்களை கண்டும் காணாமல் இருப்பதற்காக காக்கிகளுக்கு தேவையான மாமூல் உள்ளிட்டவற்றை பெற்று தருவதற்காக ஸ்பெஷலாக ஒருவரை மீடியேட்டராக நியமித்து இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘ஆசைகாட்டி இலையின் கூட்டத்துக்கு அழைக்கும் மாங்கனி மாவட்ட நிர்வாகிகளுக்கு, டிமிக்கி கொடுக்கும் இளசுகள் பற்றிச் சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘இலைகட்சியின் இளைஞர் பாசறை, ஐடி அணி, மகளிர் அணி சார்பா ஆலோசனை கூட்டங்கள், மாங்கனி மாவட்டத்துல பகுதி வாரியா நடந்துட்டு வருது. இதுல கலந்துக்க காலேஜ் ஸ்டூடண்ட்ைஸ ேதடி பிடிச்சு கூட்டிட்டு வர்றாங்க. சமீபத்துல தெற்கு தொகுதியில நடந்த கூட்டத்துல பெரிய அளவிலான டிக் ஷ்னரி தர்றோம் என்று விளம்பரம் செஞ்சு இளம்பெண்களை கூட்டிட்டு வந்தாங்களாம். கூட்டத்துல கலந்துக்கிட்ட முன்னாள் மினிஸ்டரும், சிலரை மேடைக்கு வரவச்சு டிக் ஷ்னரி கொடுத்திருக்காரு. ஆர்வத்தோட வாங்குனவுங்க, அப்படியே நேராக வீட்டுக்கு கிளம்பிட்டாங்களாம். அதை தொடர்ந்து முன்னாள் மினிஸ்டர் பேசப்பேச, இளம்பெண்கள் மட்டுமின்றி, மகளிரணியும் கும்பலாக வெளியே கிளம்புனாங்களாம். இதனால கூட்டிட்டு வந்த நிர்வாகிங்க என்ன பண்றதுனு தெரியாம முழிச்சாங்களாம். திடீர்னு, மண்டபத்தோட கதவை லாக் பண்ணி, யாரும் வெளியே போகக் கூடாதுன்னு தடை போட்டாங்களாம். இதனால பெண்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஆகிருச்சாம். இதை கவனிச்ச முன்னாள் மினிஸ்டரு, தன்னோட பேச்ச வேகவேகமா முடிக்க, அதுக்கு அப்புறமா பெண்கள வெளியே அனுப்பினாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.     …

The post டிக் ஷ்னரி கொடுத்து இளைஞர்கள், இளம் பெண்களை சேர்க்கும் இலை கட்சியின் டெக்னிக் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Dick Shnary ,Leaf Party ,Peter Mama ,Govai District Survey Department ,Head ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...